வீட்டுக்குள் ஓர் அரிசி ஆலை... 45 நிமிடத்தில் 100 கிலோ அரைக்கலாம்!
ஒ ரு காலத்தில் வீட்டுக்கு வீடு உரல், உலக்கை இருக்கும். நெல்லை வேகவைத்தோ பச்சையாகவோ உரலில் இட்டுக் குத்தி, புடைத்துத் தேவையான அரிசியை எடுத்துவைத்துக் கொள்வார்கள். தற்போது நவீன அரிசி ஆலைகள் வந்தபிறகு, உரல் உலக்கைகள் காணாமல் போய்விட்டன. பெரும்பாலான விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் நெல்லை மொத்தமாக விற்பனை செய்துவிட்டு வீட்டுத் தேவைக்கு, அரிசி வாங்கிதான் சமைக்கிறார்கள். குறைந்த அளவு நெல்லை ஆலைக்கு எடுத்துச்சென்று அரைத்து வருவதில் உள்ள சிரமங்களை மனதில் வைத்துதான், அரிசியை விலைக்கு வாங்குகிறார்கள். இப்படிப்பட்ட விவசாயிகள் பலருக்கு ‘நாம் விளைவித்த நெல்லை நம்மால் சாப்பிட முடியவில்லையே’ என்ற ஆதங்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்களின் ஆசையைத் தீர்க்கும் விதமாக ஒரு சிறிய நெல் அரைக்கும் இயந்திரத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர், சென்னையைச் சேர்ந்த ‘நல்லகீரை’ அமைப்பினர். வீட்டு மின்சாரத்திலேயே, இந்த இயந்திரத்தை இயக்க முடியுமென்பதால் இதற்கு வரவேற்பு பெருகி வருகிறது. இது தொடர்பாக நல்லகீரை அமைப்பைச் சேர்ந்த ஜெகனிடம் பேசினோம். “பசுமை விகடன்தான் எங்களை வெளியுலகத்துக்கு அறிமுக...