அற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு!
160 ஆடுகள்... ஆண்டுக்கு ரூ 17 லட்சம்...கால்நடைதுரை.நாகராஜன் - படங்கள்: கா.முரளி
‘அஞ்சாறு ஆட்டை வாங்கி மேய்ச்சுக்கிட்டுருந்தாப் போதும்.. காலாட்டிகிட்டுச் சம்பாதிக்கலாம், யார்கிட்டயும் கைகட்டி நிக்க வேண்டியதில்லை’ என்று கிராமங்களில் சொல்வார்கள். அந்தக் கூற்றை உண்மை என நிரூபித்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி, ஜெயகுமார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் இருக்கிறது ஜெயகுமாரின் பண்ணை. ஒரு பகல்பொழுதில், பண்ணையில் இருந்த ஜெயகுமாரைச் சந்தித்தோம்.
“போளூர்தான் சொந்த ஊர். இது அப்பா வாங்கின நிலம். கிணத்துப்பாசனத்தோடு மொத்தம் 13 ஏக்கர் இருக்கு. 1993-ம் வருஷம் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு வேலைக்குப் போனேன். தொடர்ந்து வேலைக்குப் போயிட்டுருந்தது சலிப்பா இருந்துச்சு. அப்படியும் 15 வருஷம் ஓட்டிட்டேன். ஒரு கட்டத்துல சுத்தமா பிடிக்காமப் போகவும் வேலையை விட்டுட்டு விவசாயம் பாக்கலாம்னு வந்துட்டேன். 2008-ம் வருஷம், விவசாயத்தை ஆரம்பிச்சேன். ஆரம்பிச்ச சமயத்துல பல வகைகள்ல நஷ்டம். அதனால, விவசாயத்தை மட்டும் நம்பக்கூடாதுனு முடிவு பண்ணி, ஆடு வளர்ப்பை ஆரம்பிச்சேன். புனேவுல இருந்து கலப்பில்லாத போயர் ரகத்துல பத்து ஆடுகளை வாங்கிட்டு வந்தேன். வளர்க்க ஆரம்பிச்ச ஆறு மாசத்துல கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு. அப்படியே தொடர்ந்து ஆடுகளைப் பெருக்க ஆரம்பிச்சேன்.

ஆரம்பத்துல ஆடுகளை மேய்ச்சலுக்குத் தான் அனுப்பினேன். அதுல ஆடுகளுக்கு நிறைய நோய்கள் தொற்ற ஆரம்பிச்சது. அதனால, ஆடுகள பரண் முறையில வளர்க்க ஆரம்பிச்சேன். இப்போ எட்டு வருஷமா பரண் முறையிலதான் ஆடுகளை வளர்த்துட்டுருக்கேன்” என்ற ஜெயகுமார், பரணுக்குள் இருந்த ஆடுகளைக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.
“ஓர் அறை 250 சதுர அடிங்கிற (25 அடி அகலம், 10 அடி நீளம்) கணக்குல மொத்தம் 27 அறைகள் இருக்கு. நாலு பக்கமும் கம்பிவலை அமைச்சுருக்கேன். ஆடுகள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அறைகளோட எண்ணிக்கையை அதிகரிச்சுக்கிட்டேன். ஓர் அறையில 12 ஆடுகள் வரை அடைக்கலாம்.
இப்போ என்கிட்ட 80 போயர் ஆடுகள், 10 தலைச்சேரி ஆடுகள், 40 ஷிரோஹி ஆடுகள், 20 பர்பத்சேரி ஆடுகள், 10 ஒஸ்மனாபாடி ஆடுகள்னு மொத்தம் 160 ஆடுகள் இருக்கு. பரண், ஆடுகள் எல்லாத்தையும் சேர்த்த மொத்த மதிப்பு 25 லட்சம் ரூபாய். போயர் ரக ஆடுகள்லதான் அதிக வருமானம் கிடைக்குது. இந்த ஆடுகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு. அதிகபட்சமாக 130 கிலோ எடை வரை வளருது. போயர் ஆடுகளோடு மற்ற ஆடுகளைக் கலப்புச் செய்றபோது கிடைக்கிற குட்டிகளும் சீக்கிரமே அதிக எடைக்கு வந்துடுது. பொதுவா மூணு மாச வயசுல, ஆடுகள் அதிகபட்சம் 10 கிலோ வரைதான் எடையிருக்கும். ஆனா, போயர் ஆடு 15லிருந்து 18 கிலோ வரை எடை வந்துடும்.

ஆடுகளுக்குத் தேவையான பசுந்தீவனங்களை இங்கேயே பயிர் செய்துருக்கேன். வேலி மசால், சூபாபுல், கோ-4, கோ-5 நேப்பியர் புல், கோ.எஃப்.எஸ்-29னு நிறையத் தீவன வகைகள் இருக்கு. எல்லாத்தையும் மாத்தி மாத்திக் கொடுக்குறதால சத்துக்கள் சரிவிகிதத்துல கிடைச்சுடுது” என்ற ஜெயகுமார் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.
“போயர் ரகத்துல வருஷத்துக்கு 120 குட்டிகள் கிடைக்குது. குட்டிகளை நாலு மாசம் வரை வளர்த்து உயிர் எடைக்கு ஒரு கிலோ 1,000 ரூபாயிலிருந்து 1,250 ரூபாய் வரை ஆடு வளர்க்கிறவங்களுக்கு விற்பனை செய்றேன். ஆடு வளர்ப்புக்கு வாங்கிட்டு போறவங்களால தான், இந்த விலைக்கு எங்களால விக்க முடியுது. வளர்ப்புக்கு ஏத்ததா இல்லைனா, அதை கறிக்காக கிலோ 300 ரூபாய் விலைக்கு விற்பனை செய்றோம். போயர் ஆடுகள் ஆணோ, பெண்ணோ அதன்மூலம் பிறக்கும் குட்டிகள் ஆரோக்கியமாவும், அதிக உடல் எடை கொண்டதாவும், எளிதில் நோய் தொற்றுக்கு ஆளாகாம இருக்கிறதாலயும், இத வளக்கிறதுக்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுறாங்க. அவங்களுக்கு விக்கிறது மூலமா எப்படியும் ஒரு குட்டி 15,000 ரூபாய்க்கு விற்பனையாகிடும். அந்த வகையில வருஷத்துக்கு 18,00,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. மற்ற ஆடுகள் மூலமா வருஷத்துக்குச் சராசரியா 5,00,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு 23,00,000 ரூபாய்க்கு குறையாம வருமானம் கிடைச்சுடும். இதுல தீவனம், மருத்துவம், பராமரிப்புனு 6,00,000 ரூபாய் வரை செலவாகும். அதுபோக, வருஷத்துக்கு 17,00,000 ரூபாய் லாபமா நிக்கும்” என்ற ஜெயகுமார்,

“நான் சொல்றதைக் கேட்டுட்டு ஆடு வளர்ப்புல இவ்வளவு லாபமானு உடனடியா ஆடு வளர்ப்புல இறங்கிடக்கூடாது. எனக்கு, இந்த அளவு லாபம் ஒரே வருஷத்துல கிடைச்சுடல. படிப்படியா அதிகரிச்சதுதான். நம்ம பகுதியில உள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ரக ஆடுகளைக் கண்டறிஞ்சு வளர்க்க ஆரம்பிக்கணும். செழிம்பா பசுந்தீவனம் விளைய வெக்கிறதுக்குப் போதுமான அளவு நிலம் இருக்கணும். தேவையான அளவு தண்ணீர் வசதி இருக்கணும். தகுந்த வேலையாள்களை அமைச்சுக்கணும். நோய்த்தடுப்பு முறைகளைத் தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம். அதே மாதிரி பண்ணை அமைக்கிற நிலம்,விற்பனை வாய்ப்புள்ள பகுதியா இருக்க வேண்டியது ரொம்ப அவசியம். ஆரம்பத்துல கொஞ்சமா ஆடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சுக் கொஞ்சம் அனுபவம் வந்த பிறகுதான் ஆடுகளோட எண்ணிக்கையை அதிகரிக்கணும். இதையெல்லாம் கடைப்பிடிச்சா ஆடு வளர்ப்புல கண்டிப்பா லட்சக்கணக்குல லாபம் பார்க்க முடியும்” என்று சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, ஜெயகுமார், செல்போன்: 99409 85577

ஆடு வளர்ப்பில் அவசியமானவை!
ஆடுகளைப் பராமரிக்கும் முறைகள் குறித்து ஜெயகுமார் சொன்ன விஷயங்கள் இங்கே...
குட்டிகள் பிறந்ததிலிருந்து ஆடுகளுக்குப் போட வேண்டிய தடுப்பூசிகளைக் கால்நடை மருத்துவர் மூலம் போட்டு வர வேண்டும். மருத்துவரின் ஆலோசனைபடி குறிப்பிட்ட இடைவெளியில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
ஆடுகளுக்குத் தினமும் காலை 9 மணிக்குள் அடர்தீவனம் (மக்காச்சோளம், பயறு வகைப் பொட்டுகள், அரிசித்தவிடு, கோதுமைத்தவிடு, கடலைப்பிண்ணாக்கு, உப்பு, தாது உப்புக்கள் அடங்கிய கலவை) கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து சோளத்தட்டை, கடலைக்கொடி போன்ற உலர்தீவனங்களைக் கொடுக்க வேண்டும். மதியம் மற்றும் மாலை வேளைகளில் வேலிமசால், சூபாபுல், கோ-4, கோ-5, நேப்பியர் புல், கோ.எஃப்.எஸ்-29 போன்ற பசுந்தீவனங்களைக் கொடுக்க வேண்டும். பசுந்தீவனத்தில் புல் வகைகள், பயறு வகைகள், மர இலைகள் எனக் கலந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆடுகளுக்கு 24 மணிநேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பண்ணையின் அன்றாட நடைமுறைகளைப் பதிவேட்டில் எழுதிப் பராமரிக்க வேண்டும். பண்ணைப் பதிவேட்டில் பிறப்பு, இறப்பு, இனச்சேர்க்கை விவரங்கள், தடுப்பூசி போட வேண்டிய காலம், ஆடுகளின் எடை குறித்த விவரங்கள், வாங்கிய மற்றும் விற்ற ஆடுகளின் விவரங்கள், அன்றாடச் செலவுகள் போன்ற விஷயங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
தினமும் காலையில் பரணைச் சுத்தம் செய்ய வேண்டும். அந்தச் சமயத்தில் ஆடுகளை வெளியில் உலவவிடலாம்.

Comments
Post a Comment